பிரிட்டனின் இளவயது கவுன்சிலர் திடீர் மரணம்!!

666

மிட் டெவோன் மாவட்டம் Tiverton நகரசபையின் இளவயது பெண் கவுன்சிலரான கிளாரிசா ஸ்லேட் திடீரென மரணமடைந்துள்ளார்.

கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக Tiverton நகரசபைக்கு போட்டியிட்ட கிளாரிசா ஸ்லேட் 2015 ஆம் ஆண்டு தனது 18 வயதில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற கிளாரிசா ஸ்லேட், வின்சிஸ்டரில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென மரணமடைந்துள்ளார்.

எனினும் அவரது மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை.

தனது மகள் கிளாரிசா ஸ்லேட்டின் மரணத்தினால் தாம் பேரிழப்படைந்துள்ளதாக அவரது தந்தை கொலின் ஸ்லேட் மிகுந்த துயரத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகளின் இலட்சியம் எதிர்காலத்தில் பிரதமராக வரவேண்டும் என்பது தான். ஆயினும் மகளின் வாழ்க்கை மிகவும் குறுகியதாகி விட்டது என்று குறிப்பிட்டார்.

கிளாரிசா ஸ்லேட் உடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் அவரது மரணம் பேரிழப்பையே கொடுத்துள்ளது.