பிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்!!

438

இளைஞர்….

பிரித்தானியாவில் ஆற்றில் சி க்கித் த வித்த நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர், அவரை காப்பாற்ற முயன்று இருவருமே இறந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Somerset-ன் Bath-ல் இருக்கும் ஆற்றில் இரண்டு பேர் அ டித்து செ ல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகவும், இவர்கள் இரண்டு பேரும் Tesco ஊழியர்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த சில தகவல்களை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் சம்பவ தினத்தன்று, அதாவது நேற்று 24 வயது மதிக்கத்தக்க Velly Sousa என்ற நபர் ஆற்றில் சிக்கியுள்ளார்.

இதனால் அவரை காப்பாற்றுவதற்காக சக நண்பர் என்று கூறப்படும், 20 வயது மதிக்கத்தக்க Samuel Fernandez குதித்துள்ளார். இதில் இருவருமே சிக்கிவிட்டதால், இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞர்களின் நண்பரான Luvson D’Costa(29), அவர்கள் இருவரும் சக ஊழியர்கள். Wiltshire-ன் Swindon அருகே இருக்கும் Tesco-வில் வேலை பார்த்து வந்தனர்.

இரண்டு பேருமே மிகச் சிறந்த நண்பர்கள். அதில் Velly Sousa-வுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.