‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

388

பீஸ்ட்…

நெல்சன் இ.ய.க்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இ.ய.க்குகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இ.ய.க்.குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.

இதுதவிர மலையாள நடிகை அபர்ணா தாஸும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பீஸ்ட் படத்தில் அவர், நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளாராம்.