புதியவாரிசை வரவேற்க தயாராகிறது லண்டன்!

853

பிரித்தானிய அரச குடும்பத்தின் மூன்றாவது வாரிசை சுமந்துக் கொண்டிருக்கும் இளவரசி கேட் மிடில்டனின் பிரசவ காலம் நெருங்கியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இளவரசி கேட் பிரசவத்திற்காக லண்டன் லிண்டோ விங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

அரச குடும்பத்தின் மூன்றாவது வாரிசு குறித்த செய்தியை உலகுக்கு முந்திக்கொண்டு சொல்வதற்காக உலகலாவிய ரீதியிலுள்ள ஊடகங்கள் வைத்தியசாலை வளாகத்தை சூழ்ந்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், வைத்தியசாலையில் வாகன நிறுத்த கட்டுப்பாடுகள், ஊடகங்களுக்கான தடைகளும் நேற்று அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் பாரியார் கேட் தம்பதிகளின் முதல் இரு குழந்தைகளும் இதே வைத்தியசாலையிலேயே பிறந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கலந்துக் கொள்ளும் முதல் பொது நிகழ்வு இதுவாகும்.