புறாவை எட்டி உதைத்த நபர்… அடுத்த நொடியே பலி தீர்த்த கர்மா : தீயாய் பரவும் வீடியோ!!

1347

புறா….

பறவை ஒன்றை எட்டி உதைத்த நபர் ஒருவர் அடுத்த நொடியே அதற்கான தக்க தண்டனையை பெற்றுள்ளார்.

இது குறித்த காணொளிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் புறா ஒன்று தெருவோரம் நடைபாதையில் உள்ளது.

அப்போது அங்கு நடந்த சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அந்த புறாவை பார்த்ததும் ஆவேசமடைகிறார்.

அந்த புறாவை எட்டி உதைக்க வேகமாக துரத்துகிறார். அப்போது தன்னை துரத்தி ஒருவர் வருகிறார் என்று தெரிந்ததும் அந்த புறா பறந்து செல்ல நினைக்கிறது. அப்படியும் அவர் அந்த புறாவை விடாமல் துரத்தி சென்று எட்டி உதைக்க நினைக்கிறார்.

அப்போது நிலைதடுமாறி அங்கு இருந்த குப்படி தொட்டியில் மோதி கிழே விழுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பலர் அந்த நபர் வாயில்லாத உயிரினத்தை துன்புறுத்த நினைத்ததற்கு உடனடி கர்மா பலி வாங்கியுள்ளதாக வீடியோவை பகிர்ந்துவருகின்றனர்.