பெண்கள் தனியாக உள்ள வீடுகளே இலக்கு : நெஞ்சை உறைய வைத்த கொ.ள்.ளையன்!!

606

அறிவழகன்…

கடந்த வாரத்தில் வடபழனி பகுதிகளில் அடுக்கடுக்கான திருட்டு மற்றும் வீடு புகுந்து கொள்ளை அடித்த சம்பவங்கள் நடந்தேறி வந்தன. குறிப்பாக வடபழனி தங்கவேல் காலனி பகுதியில் ஒரு வீட்டில் 2 சவரன் நகையும் ரூபாய் 8000 பணமும், அதேபோல பக்தவச்சலம் காலனி முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 10 சவரன் நகை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பணமும் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் 6 கிராம் மோதிரம் மற்றும் ரூபாய் 30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டன.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வடபழனி போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டறிந்து அவரது செல்போன் நம்பரை வைத்து டிராக் செய்து ஓசூர் அருகே உள்ள ஒரு விடுதியில் வைத்து தொடர் கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மாதர் அல்லி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன்(32) என்பது தெரியவந்தது.

பர்கூர் அடுத்த மாதர் அல்லி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகனின் தந்தை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி(VAO) என்பதும் அறிவழகன் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் இளங்கலை கணிதவியல் படித்துவிட்டு பின்பு சென்னை, மெட்ராஸ் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளதும் தெரியவந்தது.
இவரிடம் நடத்தப்பட்ட அடுத்தக்கட்ட விசாரணையில் பழைய வழக்குகள் பற்றிய நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் போலீசாருக்கு தெரிய வந்தன.

அறிவழகன் இளங்கலை கணிதம் பட்டப்படிப்பு முடித்த பின் 2009-ஆம் ஆண்டு தர்மபுரி பகுதிகளில் திறந்து கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் தர்மபுரி மாவட்டம் மாத்தூர் காவல் துறையினரால் மூன்று முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது தெரியவந்தது.

பின்பு எம்.பி.ஏ படிப்பதற்காக சென்னை வந்த இவர் குமரன் நகர் பகுதிகளில் அடுக்கடுக்கான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதால் 2016ஆம் ஆண்டு குமரன் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு மற்றொரு கொள்ளை சம்பவத்தில் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அறிவழகனின் செல்போனை போலீசார் வாங்கி சோதனை செய்தபோது அதில் பல ஆபாச வீடியோக்களும், ஆபாச புகைப்படங்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அது பற்றிய விசாரணையில் இவர் தனியாக பெண்கள் வசிக்கும் வீடு, கணவன் வெளிநாடுகளில் வேலை செய்யும் வீடு என நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார் என்பதும், அப்படி தனியாக இருக்கும் பெண்களிடம் நகை மற்றும் பணம் கொள்ளை அடிப்பதுடன் அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தததும் தெரியவந்தது.

அப்போதுதான் பயத்தில் அவர்கள் பணம் மற்றும் நகைகள் கொள்ளை போன விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அறிவழகன் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோக்களாக எடுத்து வைத்தும் ஆபாச புகைப்படங்களை எடுத்து வைத்தும் வந்துள்ளான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகாரின் அடிப்படையில் இவர் மீது பாலியல் வன்கொடுமை செய்தல், பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுத்தல், போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்போது கிண்டி மகளிர் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்ததும், இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதும் வடபழனி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அறிவழகன் 2019 ஆம் ஆண்டு சேலம் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதால் சேலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அப்போது சிறை சென்றதும், சிறையிலிருந்து வெளியே வந்தபின் அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளில் திறந்து இருக்கும் வீடுகளில் உள்ளே புகுந்து திருடி வந்ததும் அதனால் 2020ஆம் ஆண்டு அம்பத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரியவந்தது.

மேலும், வேலூர் பகுதிகளில் திறந்திருக்கும் வீடுகளில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததால் வேலூர் போலீசார் 2021 ஜனவரி மாதம் இவரை கைது செய்ததும் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த பின் வடபழனி பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தான் வடபழனி போலீசார் தற்போது அறிவழகன் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக அறிவழகன் 2017 ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தின் போது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற பின்னரும், இவர் அதே பாணியில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பகுதியாக சில தினங்கள் நோட்டமிடும் இவர் அப்பகுதியில் உள்ள தனியாக வசிக்கும் பெண்கள், வெளிநாட்டில் பணிபுரியும் ஆண்களின் வீடுகள், வேலைக்கு செல்லும் ஆண்கள் கொண்ட வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 150 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளையடித்திருக்கும் அறிவழகன் பூந்தமல்லி, கரையன்சாவடி, காட்டுப்பாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளிலும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அறங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 30 க்கும் அதிகம் என போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரி படிக்கும் காலங்களிலேயே உடன் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டும், அவர்களை தவறாக புகைப்படம் எடுத்து ரசிப்பதை வாடிக்கையாகவே கொண்டுவந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.