உத்தரப்பிரதேசம்……
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அசீம் மன்சூரி(27). இவரது உயரம் 2.3 அடி என்பதால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
பெற்றோருக்கு ஆறாவது மகனாக பிறந்த இவர் மற்றவர்கள் கேலி செய்வதால் பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு தனது சகோதரர்கள் நடத்தி வந்த அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
பின்பு இவரும் தொழில் கற்றுக்கொண்டு தற்போது தனியாக கடை ஒன்றினை நடத்திவருகின்றார். நன்கு பணம் சம்பாதித்த அசீமிற்கு நீண்ட நாட்களாக ஏக்கம் இருந்துள்ளது.
ஆம் திருமணம் ஆகாத இவர் தனக்கு பெண் தேடி தருமாறு காவல்நிலையம் வரை சென்று கோரிக்கை வைத்ததோடு, முதல்வருக்கும் கடிதம் எழுதி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு 2.5 அடி உயரம் உள்ள புஷாரா என்ற பெண்ணுடன் அசீமிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அசீம் ஊருக்கு அருகே உள்ள ஹபூர் பகுதியை சேர்ந்த புஷாராவுடன் நிச்சயம் நடந்துள்ளது.
பட்டப்படிப்பு படித்து வந்த புஷாரா ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ள தீர்மானித்த நிலையில், தற்போது இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
அசீம் காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டதாக இணையவாசிகள் குறித்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.