பெற்றோர்களின் அலட்சியத்தால் ஒன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்!!

400

சென்னை…

பெற்றோர்களின் அலட்சியத்தால் ஒன்றரை மாத குழந்தை ஒன்று மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது போன்று தற்போதும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை மண்ணடி இப்ராஹிம் சாகிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு ஆசியா என்ற ஒன்றரை மாத குழந்தை இருந்துள்ளது. இவர்கள் 3வது மாடியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை மூன்றாவது மாடியில் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது கம்பியில் ஏரி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

மருத்துவர்கள் 2 மணிநேரம் போராடியும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஒன்றரை மாத குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் கவனமாக இருந்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது என்றும் பலர் விமர்சித்து வரும் நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.