பேராசிரியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த ஆய்வக உதவியாளர் : விரக்தியடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

347

நாமக்கல்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன் இவர் கோவை தனியார் கல்லூரியில் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பானுப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 வயது பிரணிதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்யும் போது தான் கல்லூரியில் பேராசிரியராக உள்ளதாக கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

திருமணமான இரண்டாம் மாதமே கணவர் கல்லூரி ஆய்வகத்தில் உதவியாளராக வேலை செய்கிறார் என்று தெரிந்தவுடன் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றும் காலை முதலே கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் பானுப்பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

மேலும் கணவர் குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார். தகவலறிந்து வந்த காவல் துறையினரிடம், பெண்ணிண் தாயார் மற்றும் உறவினர்கள் ஜெயமோகனை கைது செய்யும் வரை பிரேதத்தை எடுக்கமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.