போலீசுக்கு அல்வா கொடுத்த நடிகை!!

1056

சென்னையில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பொய்சொல்லி துணை நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போரூரை சேர்ந்த கல்பனா என்பவர், தமிழ் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர், கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் குன்றத்தூர் பொலிஸ் நிலையத்தில் கல்பனா அளித்துள்ள புகார் மனுவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்பவர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் சினிமா தயாரிப்பாளரிடம் பணிபுரிந்து வருகிறேன். புதிதாக எடுக்கும் படத்தில் உங்களை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளோம்.

தற்போது சினிமா தயாரிப்பாளர் சென்னை வந்து உள்ளதால் அவரிடம் நேரில் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து விடுகிறேன் என்றும், போரூர் சிக்னல் அருகே வந்தால் காரில் அழைத்து செல்வதாகவும் கூறினார்.

அதை உண்மை என்று நம்பி அன்று இரவு நான் போரூர் சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது அங்கு காரில் வந்த ஒருவர், தன்னை குமார் என்று என்னிடம் அறிமுகம் செய்தார்.

எங்களுக்கு பின்னால் காரை பின்தொடர்ந்தபடி மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றனர்.

வீட்டின் உள்ளே சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களுடன் சேர்ந்து 3 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மேலும், எனது செல்போன் மற்றும் நகைகளை திருடிவிட்டனர் என புகார் அளித்துள்ளார். குன்றத்தூர் பொலிசார் அந்த துணை நடிகைக்கு வந்த செல்போன் எண், அந்த நபர்களின் அடையாளம், கார் பதிவெண் ஆகியவற்றை வைத்து 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், துணை நடிகையை அழைத்துச்சென்ற ஒருவரின் செல்போன் நம்பர் பொலிசிற்கு கிடைத்தது. அதை வைத்து விசாரித்தபோது, அது தவறான எண் என்று தெரிந்தது. மேலும், வாடகை கார் குறித்து விசாரித்தபோது, அதுவும் பொய் என்று தெரிந்தது.

இதனால், துணை நடிகையின் செல்போனில் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அடுத்து, அவர் கொடுத்த வடபழனி முகவரிக்குச் சென்று விசாரித்தோம். அந்த முகவரியில் துணை நடிகை வசிக்கவில்லை.

அவர் புகாரில் கூறியதுபோல எந்தவித சம்பவமும் குன்றத்தூரில் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியிருக்கையில் எதற்காக, இப்படி பொய் தகவல்களை கொடுத்து பொலிசாரை ஏமாற்றினார் என்பது தெரியவில்லை.