போலீஸ் நிலையத்தில் கணவன் கண்முன்னே மனைவி செய்த செயலால் அதிர்ந்துபோன கணவன்!!

618

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் மீது புகார் கூறிய மனைவி, அவர் கண்முன்னே காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் கூரியர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர், ரூபாவதி என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு படிக்கும் வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், ரூபாவதி, மதுவிற்கு அடிமையான என் கணவர் என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். எனது தந்தை இறந்தபிறகு எனது தாய், எனக்கும் எனது சகோதரிகளுக்கும் சொத்தப் பிரித்து கொடுத்தார்.

அதில் எனக்கு கொடுத்த பாகத்தை எனது பெயரில் வீடு வாங்கினேன். அந்த வீட்டை என் கணவரின் பெயரில் எழுதாத காரணத்தால் எனது மாமியார், நாத்தனார்கள் தூண்டுதலின்பேரில் தினமும் குடித்து விட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார்.

 

இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன். இதையடுத்து சிகிச்சை பெற்று என் அக்கா விட்டில் தங்கினேன். இதைத் தொடர்ந்து நான் வீட்டிற்கு திரும்பிய போது,

கணவர் என் தாலி உள்பட 25 சவரன் தங்க நகைகள், வீட்டு பத்திரம், என்னுடைய ஆதார்கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மருத்துவ சான்றிதழ், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார்.

எனது மகனையும் அவரோடு அழைத்துச் சென்றுவிட்டார். இது குறித்து கேட்ட போது அவர் தர மறுத்துவிட்டார். நான் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துவிட்டேன்,

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு ரூபாவின் கணவர் பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில், தனது மனைவி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்தார்.

தகாத உறவின் போது எடுக்கப்பட்ட தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வைத்து பெஞ்சமின் 20 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். மேலும் கொலை மிரட்டலும் விடுப்பதாகவும், தனது மனைவி தகாத உறவில் இருந்தது எனக்கு தெரியாது.

கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பின்னரே தனக்கு அனைத்து விஷயங்களும் தெரியவந்தது என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த ரூபாவதி கணவர் ஜெயபிரகாஷ் வீட்டை அபகரிப்பதற்காகவே இதுபோன்ற அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ரூபாவதி கூறினார்.

மேலும் பெஞ்சமின் தனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் இருந்த உறவு 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விஷயம் என கூறினார்.

ஆனால், காவலர் ஆணையர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த, அடுத்த பத்தாவது நிமிடத்தில், யாருடன் முறிவு முடிந்துவிட்டதாக கூறினாரோ, அதே பிராங்க்ளினுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.