மகனின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்..

277

தாய்:

தமிழகத்தில் மதுபோதையில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற மகனை வெட்டிக் கொன்ற தாயின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.கம்பம் அருகே தொட்டன்மன் துறையில் முல்லைப்பெரியாறு தடுப்பணை அருகே உள்ள புதரில் இருந்து ஆண் ஒருவரின் தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்த போது, ஒரு பெண் மற்றும் ஆண் பைக்கில் வந்து சாக்குமூட்டையை வீசி சென்றது தெரியவந்தது.இதனை தொடர்ந்து மோப்ப நாயை வைத்து பிடிக்க முயன்றதில், சடலம் கிடந்த இடத்திலிருந்து நாராயணதேவன்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்னவாய்க்கால் வரை நாய் ஓடியது. உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தீவிரமாக தேடியது காவல்துறை.

இந்நிலையில் செல்வி(வயது 49) மற்றும் விஜய்பாரத்(வயது 25) இருவரும் பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் (வயது 30) என்பதும் தெரியவந்தது.

மேலதிக விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார், அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த விக்னேஷ்வரன் கோவையில் வேலை செய்து வந்தார்.

மது, கஞ்சாவுக்கு அடிமையாகி தகாத முறையில் பேசி வந்துள்ளான், இந்நிலையில் கடந்த வாரம் விஜய்பாரத்துக்கு திருமணம் முடிந்த நிலையில் போதையில் தாய் செல்வியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருவரும் சேர்த்து கொலை செய்தனர், அத்துடன் தண்டனையிலிருந்து தப்பிக்க தலை, கை, கால்களை துண்டித்து வெவ்வேறு பகுதிகளில் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.