மகனை உயிருடன் மாட்டு சாணத்தில் புதைத்த தாய்! திருமண வாழ்க்கைக்கு இடைஞ்சல்!!

502

ஒடிசாவில் பிறந்த மகனை உயிருடன் மாட்டு சாணத்தில் புதைத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஒடிசாவில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் திபாசாஹி கிராமத்தில் ஹிந்து சிங் – மிசூரி சிங் தம்பதியினருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது.

மிசூரி தனது முதல் குழந்தைக்கு கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதை யாருக்கும் தெரிவிக்காமல், மிசூரி அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மாட்டுச் சாண குழியில் உயிருடன் புதைத்துள்ளார்.

குழந்தை பற்றி கிராம மக்கள் கேட்டதற்கு நிறையக் காரணங்களை சொல்லிச் சமாளித்துள்ளார்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் குழியில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் உடனடியாக பொலிசிற்கு தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நடத்திய சோதனையில் அந்த குழியில் பிறந்த குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதைக் கண்டு கிராமத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது மிசூரியின் குழந்தை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து , அவரிடம் விசாரணை நடத்தியதில், திருமண வாழ்க்கைக்கு குழந்தை இடைஞ்சலாக இருக்கும் என கருதி இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.