சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வரும் பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களாகப் பாலமுருகனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், அவர் விடுமுறையில் இருந்துள்ளார். நேற்று அவர் பணிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய இவர், இரவில் தூங்க சென்றுள்ளார்.
காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுப்பார்த்தபோதுதான் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
இதையடுத்து, நீலாங்கரை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார், பாலமுருகனின் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாலமுருகனின் தந்தை விஜயரங்கன் கூறியதாவது, 3 மாதங்களுக்கு முன்பு இந்த வேலை பிடிக்கவில்லை என என்னிடம் கூறினான். வேலைக்கு செல்வதற்கு முன்பு மேடம் என்று போனில் பேசிக்கொண்டிருந்தான்.
பின்னர், வீட்டுக்கு வந்தவன் இப்படி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான். அவருடன் பிறந்த இரண்டு சகோதரிகளில் ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.
அடுத்து, பாலமுருகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. ‘ஐந்து பெண்களைப் பார்த்துள்ளோம். விரைவில் மணக்கோலத்தில் அவரைப் பார்ப்போம்’ என்று நினைத்த எங்களுக்கு, அவரின் இழப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.