மகன் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த பெற்றோருக்கு நேர்ந்த சோகம்!!

385

கோயம்புத்தூர்……

தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூரின் கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், இவரது மனைவி சரண்யா, இவர்களுக்கு 15 வயதில் ஷ்யாம் என்ற மகன் இருந்தான்.

கடந்த டிசம்பர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ஷ்யாம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் அழுது புலம்பியுள்ளனர் சத்யராஜ்- சரண்யா தம்பதியினர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர், இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு அளித்த தகவலின் பேரில், பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.