மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் உல்லாசம்… மகளிடமும் அத்துமீறிய கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!

583

வேலூர்….

காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (34). இவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் உயிரிழந்தார். இந்த நிலையில் இவர்களுடைய ஐந்தரை வயது மகள் குமரனுடன் வசித்து வந்தார்.

குமரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் குமரனுக்கும் அடையாளம் தெரியாத பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாகவும்,

இருவரும் சிறுமியின் முன்பாகவே தவறான முறையில் நடந்ததாகவும், மேலும் அந்த சிறுமியிடமும் குமரன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து வீட்டில் நடப்பதை யாரிடமும் தெரிவித்தால் உன்னை கொன்று விடுவேன் என்று குமரன் கத்தியை காட்டி மிரட்டியதாகவும், சிறுமியை சித்திரவதை செய்ததாகவும் தெரிகிறது.

இந்ந நிலையில் நடந்ததை சிறுமி தனது வீட்டின் அருகில் வசித்து வந்த நபரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காட்பாடி அனைத்து மகளிர் காவல் துறை காவல் ஆய்வாளர் காஞ்சனா விசாரணை மேற்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமரனை கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.