மடாதிபதி திடீரென தூக்கிட்டு தற்கொலை : சிக்கிய கடிதம்!!

1065

கர்நாடக…..

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் காஞ்சுக்கல் என்ற மடத்தில் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி(45). இவர் 1997ஆம் ஆண்டு முதல் மடாதிபதியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பசவலிங்க சுவாமி உறங்க சென்றார். ஆனால் காலை 4 மணிக்கு அவர் பூஜை செய்ய வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மடத்தில் உள்ளவர்கள் அறையின் கதவை தட்டினர்.

ஆனால் கதவு திறக்காததால் அறையில் பார்த்தபோது பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் பசவலிங்க சுவாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மடத்தில் சோதனை நடத்தப்பட்டபோது பசவலிங்க சுவாமி எழுதி வைத்திருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், ‘பஞ்சுகால் பாண்டே மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டினர்’ என அவர் எழுதியிருந்தார்.

மேலும் மிரட்டலால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது முடிவுக்கு காரணமானவர்களின் பெயர்களையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்கொலை தொடர்பாக கடிதத்தில் இருந்த பல விடயங்களை பொலிஸார் வெளியிட மறுத்துவிட்டனர்.

கடிதத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் சிலும்பி மடத்தின் மடாதிபதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.