மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட சடலத்திற்கு கொரோனா பரிசோதனை : அதிர்ச்சி சம்பவம்!!

725

கொரோனா பரிசோதனை:

இந்தியாவில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா என்பதை அறிய பரிசோதனை செய்ய பெண்ணொருவர் கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 70 வயது முதியவர் சமீபத்தில் உ யிரிழந்தார். இதையடுத்து அவரின் சடலத்தை குடும்பத்தார் புதைத்தனர். இதன்பின்னர் அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என சுகாதார அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள பெண் மருத்துவ ஊழியர் ஒருவரை கட்டாயப்படுத்தி முதியவர் புதைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் ச டலம் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் அந்த பள்ளத்தில் இறங்கிய அந்த பெண் சடலத்தின் வாய்க்குள் குச்சி போன்ற உபகரணத்தை நுழைத்து பரிசோதனைக்கு தேவையான விடயத்தை செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ பணியாளர்கள் இது தொடர்பில் கூறுகையில், கொரோனா தொற்று சமயத்தில் நாங்கள் இரவு, பகல் பாராமல் பணிபுரிகிறோம்.

முதியவர் இறந்த உடனேயே சுகாதார துறை அதிகாரிகள் அவர் உடலுக்கு பரிசோதனை செய்ய பெண் ஊழியரை அழைக்காதது ஏன்? அவர் புதைக்கப்பட்ட பின்னர் பரிசோதனைக்கு மாதிரிகளை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவது நியாயமாகாது என கூறியுள்ளனர்.