மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகன் : ஆத்திரமடைந்த தந்தையால் நேர்ந்த கொடூரம்!!

222

நெல்லை…

நெல்லையில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனின் தலையில் குழவிக் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.

மேலப்பாளையம் ஆமின்புரத்தைச் சேர்ந்த அப்துல்லாவின் மகன் அப்துல்ரகுமான். 27 வயதான அப்துல்ரகுமான் வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

நேற்றிரவும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த அப்துல்ரகுமான், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

விடியும் வரை இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் நீடித்ததாகக் கூறப்படும் நிலையில்,

ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கு ஏறி, வீட்டிலிருந்த குழவிக் கல்லை தூக்கி மகனின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார் அப்துல்லா.

பிறகு தாமாகவே காவல் நிலையத்துக்கு போன் செய்து மகனைக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்த அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.