சமந்தா…..
சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப்போவதாக அறிவித்த சமந்தா புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் விவாகரத்து உண்மை தான் போன்று என பேச்சு கிளம்பியிருக்கிறது.
ஹைலைட்ஸ்:
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் சமந்தா
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கும் சமந்தா
ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
விஜய் அப்பா சொன்னது தப்பா?
குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்து நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க முடிவு செய்தார் சமந்தா. இந்நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்த சமந்தா தற்போது செய்திருக்கும் காரியத்தை பார்த்தவர்கள் அப்படி என்றால் விவாகரத்து பேச்சு உண்மையாக இருக்குமோ என்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் கணவர் குடும்பத்து பெயரை நீக்கியதில் இருந்து சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரியப் போவதாக பேச்சாக உள்ளது.
நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவை பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனா வீட்டில் வசிப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெலுங்கு பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சமந்தாவின் மாமனாரான நாகர்ஜுனாவோ, தன் மகன் விவாகரத்து கேள்வியை தவிர்க்க மீடியாவை சந்திக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
விவாகரத்து குறித்து நாக சைதன்யா இதுவரை அமைதியாக இருந்து வருகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியாவில் சமந்தா இருந்தபோது இந்த விவாகரத்து பேச்சு எப்படி கிளம்பியது என்று திரையுலகை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சமந்தா புதுப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததும் விவாகரத்து பேச்சு அதிகமாகிவிட்டது.