மனைவியை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த கணவர் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!

618

கர்நாடக….

சூதாட்ட பழக்கம் முற்றியதால் தனது சம்பாத்யம் அனைத்தையும் இழந்த கணவர், மனைவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்த போது ஏற்பட்ட சண்டையில் மனைவியை கொலை செய்து நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள கோணனூறு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கரியப்பா (வயது 40). இவருக்கு சுமா (வயது 26) எனும் பெண்ணுடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

மளிகைக் கடை ஒன்றில் வேலைபார்த்து வரும் கரியப்பாவுக்கு சூதாட்டப் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக தனது வருமானம் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்ததுடன் தான் சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதையும் அவர் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதனால் கரியப்பாவின் குடும்பம் மிகவும் வறுமையில் தவித்து வந்தது.

கடந்த 6 மாதங்களாக கரியப்பா, பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை பெற்று வருமாறு தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 25ம் தேதி இருவருக்கும் திருமண நாள் ஆகும். அன்றைய தினம் வரதட்சனை கேட்டு கரியப்பா சுமாவிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனையடுத்து மறுநாளான டிசம்பர் 26ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் சுமாவை பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சுமாவின் உடலை பெட்ஷீட்டில் சுருட்டி, வீட்டின் அறைக்குள்ளேயே குழி தோண்டி கரியப்பா புதைத்துள்ளார்.

பின்னர் தனது மனைவியை காணவில்லை என குடும்பத்தினரிடம் கூறி Bharamasagara போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும் மனைவியை தேடுவது போல நாடகமாடி வந்திருக்கிறார்.

இதனிடையே சுமாவின் உடலை சரியாக புதைக்காததால், வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே கடந்த ஜனவரி 4ம் தேதியன்று, போலீசார் அவரின் வீட்டில் தோண்டிப் பார்த்த போது சுமாவின் உடல் அங்கு புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து கரியப்பாவை கைது செய்து போலீசார் அவர் மீது கொலை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.