மனைவி இருக்கையில் பிரபல நடிகை மீது காதல் கொண்ட நடிகர் அமிதாப்பச்சன்: காலம் வென்ற சுவாரசிய கதை!!

885

பாலிவுட் உலகில் பல்வேறு காதல் கதைகள் வெளிவந்தாலும், அமிதாப்பச்சன்- ரேகாவின் நிஜக்காதல் இன்றைய இளம் தலைமுறையினரை கூட மெய்சிலிர்க்க வைக்கிறது.

காதல் கலைந்து, காலம் வென்றது இவர்களது வாழ்க்கையில் தான் நடந்துள்ளது.காதல் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது. எந்த வயதிலும், எந்த சூழ்நிலையிலும் அது வந்துவிடக்கூடும். அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இந்த காதல் அமிதாப்பச்சன், ஜெயபாதுரியை திருமணம் செய்துகொண்ட பின்பு தோன்றியது.அமிதாப்பச்சன்- ரேகா ஆகிய இருவரும், இணைந்து நடித்த முதல் சினிமா, ‘தோ அந்ஜானே’.

அதில் கணவன்– மனைவியாக நடித்தார்கள். படம் பெரும் வெற்றி பெற்றதும், தொடர்ந்து சில சினிமாக்களில் அவர்கள் ஜோடியாக்கப்பட்டார்கள்.

அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்ததால் அமிதாப்பும், ரேகாவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடியானார்கள்.அமிதாப் திருமண வாழ்க்கைக்கும்– காதல் வாழ்க்கைக்கும் இடையே பெருத்த மனப்போராட்டத்தில் இருந்தார்.

இதில், ஜெயபாதுரி, தனது கணவனின் வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு வந்தார்.

ஜெயா கூறியது, கடந்த சில வருடங்களாக என் கணவர் மிகுந்த மனப்போராட்டத்தில் இருக்கிறார். அவர் நிம்மதியிழந்து தவிக்கிறார், அவரை பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது, அவரது மனப்போராட்டம் நீடிக்கக்கூடாது.

நான் அவருக்காக விட்டுக்கொடுக்க தயாராகிவிட்டேன், அவர் விருப்படியே அவர் வாழட்டும், அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தடையாக இருக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.

காதல் தவறல்ல. அதனால் சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படக்கூடாது. காதல் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை அமிதாப்பும் புரிந்துகொண்டார். அதனால் அமிதாப்பும், ரேகாவும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தார்கள்.

அதன்படி இருவரும் விலகிக்கொண்டார்கள்.பொது நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டாலும் நட்புணர்வோடு சிரித்துப் பேசியபடி விலகிக்கொண்டார்கள்.

அதன்பின்னர், 1990 ஆம் ஆண்டு முகேஸ் அகர்வால் என்பவரை ரேகா திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் முகேஷ் தற்கொலை செய்துகொண்டார். தற்போது ரேகா தனியாக வசித்து வருகிறார்.

நடிகர் ஜெமினிகணேசன்- புஷ்பவள்ளி தம்பதியினரின் மகள் தான் இந்த ரேகா.காதலுக்கு மரியாதை என்று சொல்வது இதுதான்! அதன் பிறகு இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அமிதாப் இந்த விஷயத்தில் மிகுந்த பெருந்தன்மையோடு நடந்துகொண்டார்.