மனைவி இ றந்த அ திர்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட கணவன் : 23 ஆண்டுகள் கழித்து கொரோனாவால் நடந்துள்ள அதிசயம்!!

634

கொரோனாவால் நடந்துள்ள அதிசயம்..

தமிழகத்தில் மனைவி உ யிரிழந்த அ திர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட கணவன் 23 ஆண்டுக்குப் பின் கொரோனாவால் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த அதிசயம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு சமூக அமைப்புகள் பராமரிப்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும் தூத்துக்குடியில் `மனிதம் விதைப்போம், `ஆர்.சோயா அறக்கட்டளை’, `ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை’ ஆகிய மூன்று சமூக அமைப்புகளும் இணைந்து, மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 60 மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு மாநகராட்சிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவு அளித்து பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களில் 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முடிவெட்டி, சேவிங் செய்வது போன்ற ஒரு புகைப்படம் வாட்ஸ்அப்களில் பரவியது.

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அவரின் மகன், உறவினர்கள் மாநகராட்சி மண்டபத்துக்கு நேரில் வந்து பார்த்து உறுதி செய்தனர். 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தன் தந்தை வேல்முருகன்தான் என அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர் அவரின் மகன்கள்.

இதுகுறித்து வேல்முருகனின் உறவினர்கள் கூறுகையில்,தூத்துக்குடியில் இரண்டாம் கேட் பகுதியிலதான் வேல்முருகனின் வீடு இருக்கு. கடந்த 1997-ம் ஆண்டு அவரின் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மனைவி இறந்த சோகத்தில் சில மாதங்களில் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

பின்னர் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி கால் போன போக்கில் போய் விடுவார். பிறகு, தெரிந்தவர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

ஒருநாள் காலையில் வீட்டை விட்டுப் போனவர் பல மாதமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாதங்கள் ஆண்டுகளையும் கடந்தது.

இந்த நிலையில்தான், வாட்ஸ் அப்பில் பரவிய புகைப்படம் மூலம் அவரை கண்டுபிடித்தோம், 23 ஆண்டுகள் கழித்து அவர் கிடைத்தது உண்மையில் அதிசயம் தான். எங்களை வேல்முருகனுக்கு அடையாளம் தெரியவில்லை என கூறியுள்ளனர்.

வேல்முருகனின் மூத்தமகன் ராமச்சந்திரன் பழக்கடை நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் திருமணம் செய்துகொள்ளாமல் கோயிலில் சேவை செய்து வருகிறார். வேல்முருகன் விரைவில் குணமடைந்து மீண்டும் எங்களுடன் சேர்ந்து வசிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.