மனைவி செருப்பால் அடித்ததால் கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

1007

இந்தியாவில் குடும்பத்தார் முன்னிலையில் மனைவி செருப்பால் அடித்ததால் அவமானமடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (22). இவர் மனைவி ஷாமலா. கணவன் மனைவி இடையில் கடந்த வாரம் குடும்ப சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் காவல் நிலையத்துக்கு சென்று ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்யும் நோக்கில் பொலிசார் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள்.இந்த சமயத்தில் கிஷோரின் குடும்பத்தினரும் உடனிருந்தனர், அப்போது திடீரென கோபமடைந்த ஷாமலா கணவர் கிஷோரை அவர் குடும்பத்தார் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே செருப்பால் அடித்துள்ளார்.

இதனால் அவமானமடைந்த கிஷோர் உடனடியாக தனது வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனிடையில் பொலிசாரின் தவறான நடவடிக்கை தான் கிஷோர் தற்கொலைக்கு காரணம் என கூறி அவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தியதோடு சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.