மனைவி, மகள் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கணவன் : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

318

பெங்களூர்…

பெங்களூர் எல்.ஆர். நகரைச் சேர்ந்தவர் தாமஸ். அவரது மனைவி அந்தோணியம்மா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தாமஸ் தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர் சமையல் அறைக்குச் சென்று ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய்யை கொதிக்க வைத்து அதை தனது மனைவி மீது ஊற்றியுள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் துடித்துள்ளார். இதைப்பார்த்த மகள் தாயைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் தாமஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மீது கொதிக்கும் எண்ணெய் கணவன் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.