மயானத்தில் சேவை செய்யும் மாணவிகள்! நெகிழ வைக்கும் சம்பவம்!!

350

கொரோனா……

கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில், மருத்துவ கல்லூரி, முதுகலை மாணவிகள் இருவர் இணைந்து சேவையாற்றி வருவது, பாராட்டை பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், அப்பகுதியில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனாவினால் உயிரிழப்போரை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவி நிக்கோல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவி டினா ஆகிய இருவரும், மயானத்திற்கு கொண்டு வரப்படும் உடல்களை அடக்கம் செய்திடும் பணியில் தினமும் 5 மணி நேரத்திற்கு மேலாக சேவை உணர்வோடு தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

மாணவி நிக்கோலின் தந்தை கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன்காரணமாக தாங்களும் கொரோனா பணியில் தங்களை ஈடுப்படுத்திகொள்ள நினைத்துள்ளானர்.

“கொரோனா போன்ற நோய் தொற்று காலத்தில் வீட்டில் வெறுமையாக உட்கார்ந்துகொண்டு இருப்பதைவிட மற்றவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியை தருகிறது. எல்லா இடத்திலும் ஆபத்து உள்ளதுதான். அதற்காக கொரோனா போன்ற நோய் தொற்று காலத்தில் அமைதியாக இருக்கமுடியாது” என்கிறார்கள் மாணவிகள் இருவரும்.