மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிந்து திடீர் விபத்து! ஷாக் வீடியோ!

285

மருத்துவமனை……..

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உ.யி.ரி.ழந்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் டேங்கரில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டு வெண்புகை பரவியது. இதனால் அந்தப் பகுதியில் பீதி ஏற்பட்டது.

இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்து புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.