மருமகள் மீது கொரோனா வைரஸ் பரப்ப மாமியார் செய்த மோசமான செயல்! அதிர்ச்சி சம்பவம்!!

479

தெலுங்கானா………..

கொரோனா வைரஸ் மருமகளுக்கு பரப்ப வேண்டும் என மாமியார் செய்த நூதன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டத்தில் நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த நபருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதன்பின்னர், திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே பிரச்சனை தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வீட்டுத்தனிமையில் இருந்துவருகிறார். மாமியாருக்கு கொரோனா என்பதால் அவரிடம் சமூக விலகலை கடைப்பிடித்து விலகியே இருந்து வந்திருக்கிறார் அதே வீட்டில் வசித்து வரும் அவருடைய மருமகள்.

இதனால் ஆத்திரமடைந்த மாமியார், தன் மருமகளுக்கும் கொரோனா வைரஸை பரப்பவேண்டுமென்றதால் வேண்டுமென்றே தன்னுடைய மருமகளை அவ்வப்போது கட்டிப்பிடித்து வந்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி அவருடைய பேரக்குழந்தையையும் அவர் கட்டிப்பிடித்துள்ளார். இதனால், மருமகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனையே காரணம் காட்டி மருமகளையும் அவர் வீட்டிலிருந்து துரத்தியிருக்கிறார்.

வேறு வழியில்லாமல் தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 7 மாதங்களாக ஒரிசாவில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருவதால் அவராலும் தன்னுடைய மனைவிக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.