மாமியாரை கண்டம் துண்டமாக வெட்டிய மருமகன் : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

336

பொத்தூர்….

தமிழகத்தின் ஆவடி அடுத்த பொத்தூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த25 வயதான பிந்துவுக்கும், சின்ன காஞ்சிபுரத்தில் வசிக்கும் 32 வயதான ஆனந்தன் என்பவருக்கும், கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனந்தன் அடிக்கடி மது அருந்திவிட்டு பிந்துவை அடித்து உதைத்தார் .

இதையடுத்து பிந்து, கடந்த 6 மாதத்துக்கு முன் ஆனந்தனை பிரிந்துவிட்டார். பின்னர் ஆனந்தன், பிந்துவை பலமுறை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அந்த பிந்து சம்மதித்து வர நினைத்தாலும் ,அவரின் தாயார் கவிதா சம்மதிக்கவில்லை.

இதனால் கடந்த வாரம் மீண்டும் அந்த கணவன் தன் மனைவியை கூப்பிட மாமியார் வீட்டுக்கு போனார் .அப்போது அந்த மாமியார் அந்த மருமகனை தகாத முறையில் திட்டி ,தன் மகளை அனுப்ப முடியாது என்று கூறினார்.

இதனால் கோவமான அந்த மருமகன் தான் கொண்டு வந்த கத்தியால் அவரை பலமுறை குத்தினார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாமியார் கவிதாவை அக்கம் பக்கத்தினர் ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .பின்னர் போலீசார் வழக்கு பதிந்து அந்த மருமகன் ஆனந்தனை கைது செய்தனர்