முகத்தில் ஏற்படும் சரும துளைகளை நீக்க வேண்டுமா? இந்த பொருட்கள் மட்டும் பயன்படுத்தி பாருங்க!!

1789

சரும துளைகளை நீக்க….

முகத்தில் சில பேருக்கு பள்ளம் மேடாக இருக்கும். இதற்கு காரணம் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளானது விரிந்துக் கொண்டே போவதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமாக சேர்கிறது.

இதனால் உங்களின் அழகான முகத்தில் பள்ளம், மேடுகள் உருவாகின்றன. இது முகத்தின் அழகையே மொத்தமாக கெடுக்கின்றது.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அது எப்படி என இங்கு பார்ப்போம்.

தயிரை கொண்டு பேஸ் மாஸ்க் தயாரித்து முகத்தில் பூசிவருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம். மேலும் தயிரில் காணப்படும் லாக்டிக் அமிலம் இ றந்த செல்களை அகற்ற உதவும். மேலும் சரும துளை களை இறுக்கமடைய செய்யவும் துணைபுரியும். முகப்பரு பி ரச்சினையில் இருந்தும் நிவாரணம் பெற்றுத்தரும்.

தக்காளியை நன்றாக மிக்சியில் அடித்து அதன் சாறை முகத்தில் நன்றாக தேய்த்துவிட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் செய்யும். சரும துளைகளை குறைக்கவும் உதவும்.

அரை கப் ஆப்பிள் சிடேர் வினிகரை நான்கு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும். அதில் பஞ்சை முக்கி சருமத்தில் தடவி மசாஜ் செய்துவரவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் சரும அழகு மேம்படுவதை காணலாம்.