முகத்தில் துளைத்த கத்தியுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்!!

823

மலேசியாவில் இளம்பெண் ஒருவர் முகத்தில் கத்தி ஒன்று சொருகப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இளம்பெண் தமது பணி நேரம் முடிந்த நிலையில் இரவு குடியிருப்பு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று வழி மறித்த கொள்ளையன் அவரது பையை பறித்துக் கொண்டு ஓட முயன்றுள்ளான்.ஆனால் அதை விட்டுத்தர மறுத்த இளம்பெண் அந்த கொள்ளையனுடன் போராடியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கொள்ளையன் திடீரென்று கத்தியை உருவி குறித்த இளம்பெண்ணின் முகத்தில் தாக்கியுள்ளான்.பின்னர் அவரது கைப்பையுடன் சம்பவ இடத்தில் இருந்து மாயமாகியுள்ளான். முகத்தில் சொருகப்பட்ட கத்தியுடன் குறித்த இளம்பெண், உதவிக்கு கோரியபடி அங்கேயே இருந்துள்ளார்.

இதனிடையே பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பொலிசார், அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், கொள்ளையனை தேடி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரித்து கொள்ளையனை தேடும் பணி துரிதப்படுத்தப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.