முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்! என்ன எழுதியுள்ளார் தெரியுமா?

273

பள்ளி மாணவி..

பொன்னேரி அருகே, அரசு பள்ளியை சீரமைக்கக் கோரி, பள்ளி மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், பள்ளியை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகே, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த பகுதியை சீரமைக்கவும்,

விளையாட்டு திடல் அமைக்கவும் உத்தரவிட கோரி, 2ம் வகுப்பு பயிலும் மாணவி அதிகை முத்தரசி சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பள்ளியை சீரமைக்கவும்,

விளையாட்டு திடல் அமைக்கவும் உத்தரவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவி அதிகை முத்தரசி கடிதம் எழுதினார்.