முதலிரவு முடிந்ததும் பெண் செய்த காரியம்: அதிர்ச்சியில் பணக்கார வீட்டு மாப்பிள்ளை!!

300

சத்தர்பூரில்….

திருமணம் முடிந்ததும் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆக இருந்த பெண்ணின் மோசடி கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது திருமணத்திற்காக காத்திருக்கும் பணக்கார மாப்பிள்ளைகளைக் குறிவைத்து, ஏமாற்றி பணம் நகையினை அடித்துச் செல்வது அதிகமாக நடைபெற்று வருகின்றது.

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் மேட்ரிமோனி மூலம் பெண் தேடிக்கொண்டிருந்த பணக்கார இளைஞருக்கு நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள வந்த பெண் வீட்டினர், நல்லபடியாக உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தினையும் முடித்துள்ளனர்.

இந்நிலையில் முதலிரவு முடிந்து குறித்த பெண் வீட்டிலிருந்து பணம், நகை எல்லாவற்றையும் எடுத்து வைதுள்ளார். அப்பொழுது பெண்ணின் உறவினர்கள் என்று கூறி சிலர் பெண்ணை அழைத்துச் செல்ல வந்துள்ளனர்.

இத்தருணத்தில் மாப்பிள்ளைக்கு வீட்டிற்கு வந்த நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தனது புதுமனைவியை அனுப்பி வைக்க மறுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி பொலிசாருக்கும் தகவல் கொடுத்த நிலையில்,பொலிசார் விசாரணையின் போதே குறித்த கும்பல் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. நல்லவேளையாக மாப்பிள்ளையின் நகை பணம் தப்பித்துள்ளது.

குறித்த மோசடி கும்பலை கைது செய்த பொலிசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.