முதியவரை கோடரியால் அடித்துக்கொன்ற சிறுமிகள் : நடுங்க வைக்கும் தகவல்!!

360

வயநாடு….

வயல்வெளியில் ரத்தக் கறையுடன் கிடந்த சாக்குமூட்டையினைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அருகே செல்ல அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து வயநாடு போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது முதியவரின் சடலம் படுகாயங்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த முதியவர் யார் அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர்.

போலீசாரின் விசாரணையில் முதியவரின் பெயர் முகம்மது கோயா என்பதும் அவருக்கு வயது 70 என்பதும், அவர் தனது மனைவியுடன் வயநாடு அருகே உள்ள அம்பலவயல் கிராமத்தில் வசித்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அப்பகுதியினர் இடையே விசாரணை நடத்தி வந்தனர் வந்த நிலையில், இரண்டு சிறுமிகள் காவல் நிலையம் சென்று எங்கள் அம்மாவிடம் சண்டை போட்டதால் முகமது கோயாவை தாங்கள்தான் ஆத்திரத்தில் அடித்ததில் அவர் இறந்துவிட்டார் என்று வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள்.

இதை அடுத்து முதியவரின் கொலை வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இதன் பின்னர் போலீசார் அவர்களிடம் மேலும் விசாரித்தபோது முகமதுவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் இருவரும் தாயுடன் சேர்ந்து வசித்து வருகிறோம் . முகம் எப்போதும் எங்கள் தாயாரிடம் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் .

அன்றைக்கும் அப்படித்தான் எங்க அம்மாவுடன் முகம்மது சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவோ சொல்லி தடுக்க முயற்சித்தோ, ஆனால் அந்த முதியவர் அதை கொஞ்சம் கூட கேட்காமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

இதனால் கோபம் அடைந்த நாங்கள் எடுத்து அவரது தலையில் அடித்து விட்டோம் இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து முதியவரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வயல்வெளியில் வீசிவிட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த வாக்குமூலத்தின் படி அந்த இரண்டு சிறுமிகள் மற்றும் அவரது தாயாரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார்.