மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவது குறைவு : புதிய ஆய்வில் தகவல்!!

309

கொரோனா..

மூக்கு கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது குறைவாக இருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

10 வயது முதல் 80 வயதான 304 நபர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் மூக்கு கண்ணாடியை அணிந்திருக்கும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது,

கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது, 3 முதல் 4 மடங்கு குறைவு என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒவ்வொரு மனிதனும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகள் தமது முகத்தை தொடுவதாகவும்,

அதில் சராசரியாக மூன்று தடவைகள் கண்களை தொடுகின்றனர் என்றும் இந்த நிலையிலேயே குறித்த ஆய்வின் பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஆய்வுக்குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.