ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர்: வெளியான புகைப்படம்!!

282

பாலா குமார்…

அன்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, அஜித்துடன் ‘வீரம்’, ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் பாலா குமார் முதல் மனைவியை 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் இவரது, திருமண ரிசெப்ஷன் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் பாலா, டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிறகு, தற்போது இவரது நிறுவன வரவேற்பு புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான, ‘அன்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்த படம் நல்ல வரவேற்பை பெறவே, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

பின்னர் தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் முன்னணி நாயகனாக வலம் வந்தார். இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்கிற பின்னணி பாடகியை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகளும் உள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்து 3 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார் நடிகர் பாலா.

எலிசபெத் என்கிற மருத்துவரை பாலா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்திலும், வரவேற்பிலும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இவர், பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், வீரம், அண்ணாத்த , போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.