ரகசியமாக ஷாலினிக்கு பூக்கள் வாங்கிகொடுத்த நடிகர் அஜித்: ரகசியம் உடைத்த தங்கை!!

504

கோலிவுட் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் அஜித்- ஷாலினி ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு தனது குடும்ப வாழ்க்கையில் தனிப்பட்ட கவனம் செலுத்தும் நடிகர் அஜித், பெண்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையே அவர் மீது ஷாலினி காதல் வயப்பட காரணம்.

இவர்களது காதலுக்கு அதிக முறை காதல் தூது சென்றவர் ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி ஆவார். இவர் சமீபத்தில், அஜித்- ஷாலினியின் காதல் ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

எனது அக்காவை அஜித் காதலிக்கும்போது நிறைய பூக்கள் வாங்கிகொடுப்பார். அதனை நான் வீட்டில் யாருக்கும் தெரியாமல் எனது அக்காவிடம் கொண்டு சென்று கொடுப்பேன். இவர்களது திருமண வாழ்க்கையில் அதிக சுதந்திரம் இருக்கும்.

ஒருவருக்கொருவர் அதிக சுதந்திரம் கொடுத்துக்கொள்வார்கள். இதனை நான் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

மேலும் வீட்டில் சில முக்கியமான முடிவுகளை எனது சகோதரியே எடுப்பார் என்றும் வீட்டினை அதிக சுத்தமாக வைத்துக்கொள்வதில் அஜித் அதிக கவனம் செலுத்துவார் என கூறியுள்ளார்.