ரகசிய வீடியோவால் அடுத்தடுத்து இரையான இளம்பெண் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

211

விருதுநகர்…..

விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (27). இவரும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் ஹரிஹரன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து, ஹரிஹரன் நண்பர்களான ரைஸ்மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது (27), டிரைவர் பிரவீன் (21), மற்றும் 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் ஹரிஹரன் காதலித்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனக் கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது, அந்த வீடியோவை அவர் தனது செல்போனுக்கு பார்வர்டு செய்துகொண்டு இளம்பெண்ணை மிரட்டி அவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் உடனே வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத்அகமது ஆகியோரை நேற்று கைதுசெய்தனர். பொள்ளாச்சி பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.