ரசிகர் ஒருவரால் ஏற்பட்ட பிரச்சனை: போலீசிடம் சிக்கிய பிரபல நடிகர்!!

761

நடிகர்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களே மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் வருண் தவான் போக்குவரத்து விதிகளை மீறி பிரச்சனையில் சிக்கினார்.

எப்படி என்றால் டிராபிக் சிக்னலில் வண்டி நிற்கும் போது காரில் இருந்து பாதி வெளியே வந்து ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்படி அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக பெரிய பிரச்சனையானது.

இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த குணல் கேமு என்ற நடிகர் தலையில் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரை புகைப்படம் எடுத்து ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து மும்பை டிராபிக் அதிகாரிகளின் கவனத்திற்கு வருவது போல் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த போலீசார் தற்போது நடிகரை எச்சரித்துள்ளனர். பின் நடிகரே தான் செய்த தவறுக்கு மிகவும் வருந்துகிறேன், இனி இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.