ரவுடியுடன் உல்லாசமாக இருந்த பெண் : நேரில் பார்த்த 2வது கணவன் செய்த பயங்கரம்!!

333

பெங்களூரில்..

பெங்களூரில் இரண்டாம் கணவர் மற்றும் நண்பரால் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஆனைகல் அருகே உள்ள ஜிகினி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி.

கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அழகியான அர்ச்சனா ரெட்டி ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் கணவரை நீதிமன்றம் மூலம் பிரிந்து, நவீன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான புதிதில் எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்த நிலையில் சில நாட்களாக சந்தேகம் கொண்ட கணவர் நவீன், மனைவியிடம் தினமும் சண்டையிட்டு வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவருடன் அர்ச்சனா ரெட்டி கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதை நவீன் கண்டிக்கவே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. மேலும் சொத்து பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அர்ச்சனா ரெட்டி தனக்கு சொந்தமான காரில் ஆனைக்கல் அருகே உள்ள தனது சொந்த ஊரான ஜிகினி வந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று இரவு அவர் காரில் தனது வீட்டுக்கு வீட்டுக்கு திரும்பும்போது பெங்களூரு ஓசூர் சாலை எலக்ட்ரானிக் சிட்டி அருகே காரை வழிமறித்த நவீன் மற்றும் நண்பர்கள் அர்ச்சனா ரெட்டியை காரிலிருந்து கீழே இறக்கி பட்டா கத்திகளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த அர்ச்சனா ரெட்டி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அர்ச்சனா ரெட்டி உயிர் பிரிந்ததை உறுதி செய்த பிறகு நவீன் மற்றும் நண்பர் சந்தோஷ் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இரவு என்பதால் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் இதைக்கண்டு எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அர்ச்சனா ரெட்டி உடலை கைப்பற்றி ஆனைக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதற்கான காரணத்தை அர்ச்சனா ரெட்டியின் மகன் அளித்த புகாரின் பேரில் நவீன் அவரது நண்பர் சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.