ராஜாராணி செம்பாவிற்கு 23 கிப்ட் கொடுத்த சீரியல் நடிகர் சஞ்சீவ்! ஏன் தெரியுமா?

499

சீரியல் நடிகை ஆல்யாவின் பிறந்தநாளுக்கு அவருடன் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் கொடுத்த 23 பரிசுகள் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் சில நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருப்பர். இந்த இடத்தை கடந்த வருடம் வரை தக்க வைத்து இருந்தவர் ப்ரியா பவானி சங்கர். திரைப்பட நாயகிகளையே மிஞ்சும் அளவுக்கு அவருக்கு பேன்ஸ் பட்டாளம் ஜாஸ்தியாக இருந்தது. இப்போது அந்த இடத்தை பிடித்து இருப்பவர் ஆல்யா மானசா.

சினிமா, ரியாலிட்டி ஷோ என எதுவுமே கைக்கொடுக்காதவருக்கு விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி சீரியல் பெரிய புகழுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

இதே தொடரில் அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார். அவரும் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

குளிர் 100 படத்தில் எண்ட்ரி கொடுத்தவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து, பல காலம் நடிப்புக்கு ப்ரேக் விட்டு இருந்தவர்.

தற்போது ராஜா ராணி சீரியலின் செல்லமான சின்னய்யாவாக இருக்கிறார். ஆல்யா, சஞ்சீவ்வின் ஜோடி ரசிகர்களிடம் ஹாட் ஹிட் அடித்துள்ளது. இதன் தொடக்கமாக, விஜய் தொலைக்காட்சியின் டெலி அவார்ட்ஸில் சிறந்த நடிகை, நடிகர் விருது இருவரும் பெற்றனர்.

தொடர்ந்து, இவர்கள் இருவரும் ஜோடியாக வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏன் தொலைக்காட்சி பிரபலங்கள் கூட இருவரையும் தொடர்ந்து கலாய்த்து தான் வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 27 ஆம் திகதி ஆல்யா தனது 23வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாளன்று ராஜா ராணி படப்பிடிப்பில் கலந்து கொண்டவருக்கு அவரது குழு பெரும் ஸ்வீட் சர்ப்ரைஸை கொடுத்துள்ளது. அதிலும், ஒருப்படி மேலே போய் நடிகர் சஞ்சீவ் கார்த்திக், ஆல்யாவின் 23 வயதை கணக்கில் கொண்டு 23 பரிசுகளை கொடுத்து இருக்கிறார். நாள் முழுவதும் அவரிடம் இருந்து பரிசுகள் கிடைத்தது சந்தோஷம் என ஆல்யா தெரிவித்துள்ளார்.