ரா ட்சத அலைகளுடன் ஊருக்குள் புகுந்த கடல்நீர்: சுனாமி என ஓ ட்டம்பிடித்த மக்கள்!!

301

கேரளாவில் கொச்சி அருகே ராட்சத அலைகளுடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் ப ரபர ப்பு ஏ ற்பட்டது.

கொச்சியை அடுத்த கடற்கரைப்பகுதிகளான செல்லனம், வைப்பின், நாயாரம்பலம் மற்றும் எடவனக்காடு பகுதியில் நேற்று முன்தினம் கடல் தொடர்ந்து சீ ற்றத்துடன் இருந்தது.

இந்நிலையில் தி டீரென ரா ட்சத அலைகளுடன் கி ராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது, இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மி தந்தன.

த டுப்பு சுவரை துளைத்துக் கொண்டு நீர் வந்ததால் பொதுமக்கள் ப தறிப்போயினர்.

இந்நிலையில் நேற்றும் இதேபோன்று கடல் சீ ற்றத்துடன் இருந்ததால் ப ரபரப் பு ஏற்பட்டது.

இதனால் மீண்டும் சு னாமி வந்துவிட்டதாக நினைத்து பொதுமக்கள் அ ச்சம் அடைந்து உ யரமான இடங்கள் மற்றும் மா டிகளுக்கு கு ழந்தைக ளுடன் ஓடினர்.

தங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பெரிய அலைகளை பார்த்ததில்லை எனக்கூறும் கி ராம மக்கள், ஓக்கி பு யலின் போது கூட கடல் அலையில் இவ்வளவு சீ ற்றம் இ ருந்ததில்லை என தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பா திக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடல்நீரால் சு காதார சீ ர்கேடு ஏதும் ஏற்படாமல் இருக்க மா வட்ட நி ர்வாகம் தகுந்த ந டவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.