ரொனால்டோ, ஷாருக்கான் குறித்த தகவல்களை தேடுபவரா நீங்கள்? எ ச்சரிக்கும் McAfee..!

258

இணையத்தில்…..

இணையத்தில் தபு, டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரையும் பிரபல் கால் பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றோர் குறித்த தகவல்களை தேடும் போது மிக க வனமாக இருக்க வேண்டும் என அ மெரிக்காவின் சை பர் செ க்யூரிட்டி மேஜர் மெக்காஃபி(McAfee) தெரிவித்துள்ளது.

மெக்காஃபி வெளியிட்ட ‘ஆன்லைனில் தேட மிகவும் ஆ பத்தான பிரபலங்கள்’ பட்டியலில் ஒன்பது இந்திய திரை நட்சத்திரங்களும் இந்தியரல்லாத ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபு, பன்னு, சர்மா, சின்ஹா, பாடகர்-பாடலாசிரியர் அர்மான் மாலிக், பாலிவுட் நடிகை சாரா அலிகான், தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதி ஆகியோரும், பாலிவுட் மெகாஸ்டார் ஷாருக்கான், பின்னணி பாடகர் அரிஜித் சிங் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பிரபலங்கள் குறித்த இணையதள பக்கங்கள் பெரும்பாலும் தீங்கிழைக்கும் மென்பொருளை (தீம்பொருள்) கொண்ட ஹேக்கர்களால் அமைக்கப்பட்ட தளங்களாக உள்ளதாக மெக்காஃபி தெரிவித்துள்ளது. இந்த வலைத்தளங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தி ரு டுவதாகவும் தெரிய வருகின்றது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மக்கள் இந்த முழு மு ட க்க காலத்தில் இணையத்தினை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்று மெக்காஃபி இ ந் தியாவின் பொ றி யி யல் துணைத் த லைவரும் நி ர் வாக இயக்குநருமான வெங்கட் கிருஷ்ணாபூர் கூறியுள்ளார்.