பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள சமூக மையம் ஒன்றில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலில் 15 வயதுடைய சிறுவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த சிறுவனுக்கு அருகாமையில் இருந்து கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.