வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொண்ட பிரபல ஆண்கள்!!

740

இந்திய பிரபலங்களில் தங்ஙகளை விட வயது குறைவான பெண்களை திருமணம் செய்துகொண்டவர்களின் விவரங்கள் இதோ!

சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

சச்சினை விட அஞ்சலி ஆறு வயது மூத்தவராவார். தம்பதிக்கு சாரா மற்றும் அர்ஜுன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

அபிஷேக் பச்சன்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அபிஷேக் பச்சன், முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராயை கடந்த 2007-ல் திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா ராயை விட அபிஷேக்பச்சனுக்கு 2 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்- சௌந்தர்யா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ல் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவை விட தனுஷ் 2 வயது இளையவராவார்.


சைப் அலி கான்

இந்தி திரைப்பட நடிகர் சைப் அலி கான், அம்ரிதா சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் 2004-ல் விவாகரத்து செய்தார்.

கானை விட அம்ரிதா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்துக்கு பின்னர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்.

ராஜ் குந்தரா- ஷில்பா

ஐபிஎல் கிரிக்கெட் அணி உரிமையாளர் ராஜ்குந்தரா, நடிகை ஷில்பா ஷெட்டியை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராஜ்குந்தராவை விட ஷில்பா ஷெட்டி 3 மாதங்கள் மூத்தவராவார்.