வாங்குற காசுக்கு இது தேவைதானா ஐஸ்வர்யா ராஜேஷ்!!

550

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு படத்தோடும் புது புது ஹீரோயின்களும் களமிறங்கி வருகிறார்கள் என்பதே உண்மை. அந்த அளவுக்கு ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லாமல் தமிழ் சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், நல்ல கதைக்கு ஏற்ற நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது தான் அரிதாக உள்ளது. அதனால் தற்போது இருக்கும் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்ற நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது.

கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் கதைகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இந்த நடிகைகளிடம் நேராக கொண்டு செல்கின்றனர்.

அதனால், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி தங்கள் சம்பளத்தை நிர்ணயித்து வருகின்றனர். அந்த நடிகைகளுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்குகிறாராம். ஒரு முன்னணி இயக்குனர் ஒருவர் கதாநாயகியை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் வந்துள்ளார்.

கதையை கேட்டு முடித்தவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையில் சில மாற்றங்களை கூறியுள்ளார். நான் ஒரு மூத்த இயக்குனர் என்று கூட பாராமல் என் கதையில் மாற்றம் செய்ய சொல்லி வருகிறார் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை அந்த இயக்குனர் நொந்து கொண்டு வந்தாராம்.

இருந்தாலும், அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் நிச்சயம் ஐஸ்வர்யா ராஜேஷை நாடி செல்லத்தான் போகிறது.

அவர் கேட்கும் சம்பளத்தை தட்டாமல் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.