விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய கேரள ஓட்டுநர் : சுவாசத்தை மீட்ட தமிழக போலீசார்!!

343

நீலகிரி……….

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலை விபத்தில் மூர்ச்சையாகிக் கிடந்த கேரள ஓட்டுநருக்கு மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளர் சி.பி.ஆர் எனப்படும் ( CPR – Cardiopulmonary resuscitation ) முதலுதவி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

கூடலூரிலிருந்து கேரளா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கேரள மாநில மஹிந்திரா பிக்கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அபிலாஷ் என்ற ஓட்டுநர், மயக்கமடைந்து உயிருக்குப் போராடியுள்ளார். அந்த நேரம் அவ்வழியாக சீருடை இல்லாமல் வந்த நீலகிரி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளர் சத்யமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் மரைக்காயர் ஆகியோர் சி.பி.ஆர் எனப்படும்.

மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் முதலுதவியை செய்தனர். இதனால் சில நிமிடங்களில் ஓட்டுநர் அபிலாஷ் மீண்டு கண் திறந்தார்.