விபரீதக் காதலால் இரண்டு குழந்தைகளின் தாய்க்கு இளைஞரால் அரங்கேறிய பயங்கரம்!!

289

செங்கல்பட்டு…

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சயின்ஷா( வயது 26). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சயின்ஷாவின் கணவர் இறந்த நிலையில் அவர் தனது மகன்களுடன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். சயின்ஷா திருமணம் முடிந்து கண்ணகி நகரில் தனது கணவருடன் வசிந்து வந்திருக்கிறார்.

அப்போது அவருக்கு பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த சில வருடங்களிலே கணவன் இறந்துவிட்டார். இதனையடுத்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதன்மூலம் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது கணவரும் உயிரிழந்துள்ளார். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இளம்பெண் சயின்ஷாவின் அம்மா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது மகள் துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்த போது இளம்பெண் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார் இளம்பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாயை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை கொலை செய்யப்பட்டிருந்த சாயின்ஷாவின் கள்ளக்காதலன் சென்னையை சேர்ந்த காத்திக் நேற்று வீட்டிற்கு வந்து சென்றதும்,

பின்னர் அவரது செல்போன் ஸ்சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்த போலீசாரின் சந்தேகம் கார்த்திக் மீது வலுத்தது. சாயின்ஷாவின் தாய் மற்றும் இரு மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் கார்த்திக்கை கேளம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.