விமானியின் பிடிவாதம்: பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்!!

571

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட இளம்பெண் விமானியின் பிடிவாதத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் 25 வயதான பிரிட்டானி ஆஸ்வெல் தமது கணவர் கோரியுடன் இணைந்து தென் கரோலினா பகுதிக்கு தனியார் விமான சேவை நிறுவந்த்தின் விமானம் ஒன்றில் சென்றுள்ளனர்.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது பிரிட்டானி ஆஸ்வெலுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூடவே சுய நினைவை இழந்தது போன்று பேச்சில் தடுமாற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார் ஆஸ்வெலின் கணவர் கோரி.மருத்துவர் அளித்த முதலுதவிக்கு பின்னர் கழிவறை சென்ற ஆஸ்வெல், கழிவறையிலேயே வாந்தி எடுத்துவிட்டு அங்கேயே சுயநினைவை இழந்து விழுந்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக மருத்துவமனையில் அவரை சேர்ப்பிக்க வேண்டும் என விமானியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் விமானி, வேறொரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றதுடன், விமானத்தை திருப்பி விட மறுப்பு தெரிவித்துள்ளார்.நீண்ட 3 மணி நேர விமான பயணத்திற்கு பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட ஆஸ்வெல், தொடர்ந்து 3 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார்.

பின்னர் நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். விமான மருத்துவரின் அறிவுரைப்படி குறித்த விமானத்தை உடனையே தரை இறக்கி இருந்தால் தங்களது உறவினரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2016 ஏப்ரல் மாதம் நடந்த இச்சம்பவத்தை அடுத்து பிரிட்டானி ஆஸ்வெல் உயிரிழந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது பெற்றோர் தனியார் விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதுடன் இழப்பீடும் கோரியுள்ளனர்.