விமான நிலையத்தில் வேலை… கோடிகளை சுருட்டிய கேடிகள்: வெளியான அ திர்ச்சி தகவல்!!

237

தேனி…

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலூகா ஜம்புலித்துரைச் சேர்ந்தவர் மலைச் சாமி. இவரது மனைவி சாரதா. பட்டபடிப்பு முடித்த இவர் வெகு நாட்கள்ளாக வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு வேலை வேண்டுமா? என்று குறுந் தகவல் வந்துள்ளது. இதனை நம்பி தன்னுடைய விபரங்களை அந்த எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

சாரதாவிடம் இருந்து அந்த விவரங்களை பெற்றுக் கொண்டு தொடர்பு கொண்ட நபர்கள்,விமான நிலையத்தில் உங்களுக்கு வேலை தயாராக உள்ளது பதிவு கட்டணமாக 2550 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறி பணத்தை பெற்றுக்கொண்டனர்.

அந்த கும்பல் பல்வேறு கட்டங்களாக கொஞ்சம் கொஞ்சமாக 15 லட்சத்து 74,425 ரூபாய் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்திய நிலையில் போலியான பணி நியமன ஆணையை அனுப்பிவைத்து விட்டு அதன் பிறகு சாரதாவுடனான செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டனர்

தான் ஏமாற்றுப்பட்டதை அறிந்த சாரதா, இந்த மோசடி குறித்து அறிந்தப்பின் தேனி காவல் கண்காணிப்பளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனையடுத்து சைபர் கிரைம் காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி காவல் கண்காணிப்பளர் பிரவின் உமேஷ் போங்கரேவின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டது.

அங்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இந்த மோசடிக்கும்பலை சேர்ந்த விஜய், ராமசந்திரன், கோவிந்த், ஆகிய 3 பேரையும் டெல்லியில் சுற்றி வளைத்து கைது செய்து தேனி அழைத்து வந்தனர்.

அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த மொபைல் போன்கள் உட்பட 31 மொபைல் போன்கள், லேப்டாப்கள், பிரிண்டர்கள் மற்றும் 46 கிரெடிட் கார்டுகள், மற்றும் பல்வேறு வகையான நெட்வோர்க்குகளை சேர்ந்த சிம் கார்டுகள்,போலி ஆவணங்கள் மற்றும் காசோலைகள் உள்ளிட்ட பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

குற்றவாளிகள் மூவரும் நாமக்கல்லை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் பலஆண்டுகளுக்கு முன்பாகவே டெல்லியில் குடும்பத்துடன் சென்று தங்கி
தமிழகத்தின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும் இவர்கள் ஆன்லைனில் வேலை வாங்கித்தருவதாகவும், வங்கிக்கடன் பெற்றுதருவதாகவும் குறுஞ்செய்திகள் மூலம் பல்வேறு நபர்களிடம் பலலட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் மோசடி செய்த பணத்தில் விமானத்தில் சுற்றுலா உட்பட சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

அவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேனிமாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செல்போனில் வருகின்ற குருந்தகவல்களை நம்பி இது போன்ற கும்பல்களை நம்பி பணத்தை செலுத்தினால் மொத்த பணமும் சுருட்டப்பட்டுவிடும் என்று எச்சரிக்கும் காவல்துறையினர் கூடுமானவரை இது போன்ற குருந்தகவல்களை நம்பி தொடர்பு கொள்வதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.